கலெக்டர் பெயரில் வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடி


கலெக்டர் பெயரில் வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடி
x

திருப்பூர் கலெக்டர் பெயரில் வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடியில் ஈடுபட முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

திருப்பூர்

திருப்பூர்

திருப்பூர் கலெக்டர் பெயரில் வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி அனுப்பி பண மோசடியில் ஈடுபட முயன்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

கலெக்டர் பெயரில் வாட்ஸ்-அப்

திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கடந்த 2 நாட்களாக செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் குறுஞ்செய்தி சென்றது. "வாட்ஸ்-அப் புரொபைல்" படத்தில் கலெக்டர் வினீத் புகைப்படம் இருந்தது. 63783 70419 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் இருந்து வந்த அந்த குறுஞ்செய்தியில், வேலை எவ்வாறு செல்கிறது, எப்படி இருக்கிறீர்கள் என்ற உரையாடல் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கு பதில் அளிக்கும்போது கிப்ட் வவுச்சர் வருகிறது. அதற்கு வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்குமாறு குறுஞ்செய்தியும் வருகிறது. இதைப்பார்த்த ஊழியர்கள் உடனடியாக திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்திடம் தெரிவித்தார்கள். கலெக்டரின் புகைப்படத்தை பயன்படுத்தி நூதன முறையில் மர்ம ஆசாமிகள் மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.

புகார் தெரிவிக்கலாம்

இதைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் இதுகுறித்து விசாரணையை தொடங்கியுள்ளார். முதல் கட்ட விசாரணையில் சம்பந்தப்பட்ட செல்போன் எண், ராஜஸ்தானில் இருந்து இயங்குவது தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

இதுபோல் கலெக்டர் வினீத்தின் பெயர், புகைப்படத்தை பயன்படுத்தி ஏதாவது செல்போன் எண்ணில் இருந்து வாட்ஸ்-அப் குறுஞ்செய்தி வந்தால் உடனடியாக போலீசில் புகார் தெரிவிக்கவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதேபோல் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு முன்னாள் கலெக்டர் விஜயகார்த்திகேயனின் பெயரில் அவருடைய புகைப்படத்தை பயன்படுத்தி போலியாக முகநூலில் கணக்கு தொடங்கி, பலருக்கு குறுஞ்செய்தி அனுப்பி பணம் கேட்டது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டு மாவட்ட போலீசார் விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

திருப்பூர் கலெக்டர்களை குறிவைத்து அவர்கள் பெயரில் போலியாக கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட முயற்சி செய்யும் சம்பவங்கள் தொடர்வது போலீசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.


Related Tags :
Next Story