மாவட்டத்தில் பரவலாக மழை


மாவட்டத்தில் பரவலாக மழை
x

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்தது.

பரவலாக மழை

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் களக்காடு, நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டி, சேரன்மாதேவி பகுதிகளில் நேற்று சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. பாபநாசம், சேர்வலாறு அணை பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.

அதிகபட்சமாக நாங்குநேரியில் 9 மில்லி மீட்டரும், சேர்வலாறில் 6 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. ராதாபுரம், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

நேற்று மதியம் நெல்லை மாநகர பகுதியான பாளையங்கோட்டை கொக்கிரகுளம், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. பாளையங்கோட்டை பகுதியில் அரை மணி நேரம் மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது.

நெல்லை மாநகர பகுதியில் சாலை அமைக்கும்பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மழை பெய்ததால் பல இடங்களில் சாலை சேறும், சகதியமாக மக்கள் நடந்து செல்ல முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் தென்காசி, செங்கோட்டை, ஆய்க்குடி, சிவகிரி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான பண்பொழி, பிரானூர் பார்டர் உள்ளிட்ட பகுதிகளிலும், கடனா, ராமநதி மற்றும் அடவிநயினார் அணை நீர்பிடிப்பு பகுதிகளிலும் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக ராமநதி அணைப்பகுதியில் 30 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.


Next Story