லெட்சுமாங்குடியில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?


லெட்சுமாங்குடியில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?
x

லெட்சுமாங்குடியில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடம் சீரமைக்கப்படுமா?

திருவாரூர்

லெட்சுமாங்குடியில் சேதமடைந்த அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி

கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடி கம்பர் தெரு அருகாமையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. அரசு சார்பில் அமைக்கப்பட்ட இந்த பள்ளியில் லெட்சுமாங்குடி, கம்பர் தெரு, சேகரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் உள்ள கிராமப்புற பள்ளி மாணவர்கள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளி கட்டிடம் அமைந்துள்ள இடம் குறுகலான தெருக்கள் உள்ள இடத்தில் அமைந்துள்ளது. இதனால் மாணவர்கள் சவுகரியமாக சென்று வருவதற்கு ஏதுவாக அமையவில்லை. இங்கு ஒரே பள்ளி கட்டிடம் மட்டுமே உள்ளது. அந்த கட்டிடத்திலேயே வகுப்புகள் பிரித்து வைத்து நடத்தப்படுகிறது.

சேதமடைந்த கட்டிடம் சீரமைக்கப்படுமா?

ஆனாலும் இருக்கும் ஒரே கட்டிடமும் கடந்த சில ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. குறிப்பாக கட்டிடத்தின் மேற்கூரை மற்றும் கட்டிடத்தின் சில இடங்களில் சிறு, சிறு விரிசல்கள் ஏற்பட்டு உள்ளது. இதனால் மழை காலங்களில், மழை தண்ணீர் கட்டிடத்தின் உள்பகுதியில் கசிந்து வகுப்பறையை ஈரமாக்கி விடுகிறது.

இதனால் மழைகாலங்களில் மாணவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் கூடுதல் கட்டிடங்கள் இல்லாமல் உள்ளதால், மாணவர்கள் சவுகரியமாக கல்வி பயிலுவதற்கு ஏதுவானதாக நிலை இல்லாமல் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பள்ளி கட்டிடத்தை சீரமைத்து, கூடுதல் கட்டிடங்கள் கட்டித்தர வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் மற்றும் பெற்றோர் எதிர் பார்க்கின்றனர்.


Next Story