ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் புதுப்பிக்கப்படுமா?


ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் புதுப்பிக்கப்படுமா?
x

விஸ்வநத்தம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர்

சிவகாசி,

விஸ்வநத்தம் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடத்தை புதுப்பிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம்

சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட விஸ்வநத்தம் கிராமத்தில் கடந்த 2017-ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க. அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடங்கியது.

கடந்த 6 ஆண்டுகளில் அந்த கட்டிடத்தின் பல பகுதிகள் சேதமடைந்து காணப் படுகிறது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு தினமும் 30 கர்ப்பிணிகள் உள்பட 100-க்கும் மேற்பட்ட நோயாளிகள் வருகிறார்கள். இங்கு வரும் பொது மக்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுவதால் பொதுமக்கள் நாளுக்கு நாள் அதிகளவில் வந்து செல்கிறார்கள். விஸ்வநத்தம் கிராமத்தில் உள்ள பெண்கள் 90 சதவீதம் பேர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் பார்க்க வருவதாக கூறப்படுகிறது.

புதுப்பிக்க வேண்டும்

பொதுமக்கள் அதிகம் விரும்பும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தின் கட்டிடம் சேதமடைந்து காணப்படுவதால் நோயாளிகளும், கர்ப்பிணிகளும் பெரும் அச்சத்துடன் ஆரம்ப சுகாதார நிலையம் வந்து செல்லும் நிலை உள்ளது. ஆதலால் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேதமடைந்த பகுதிகளை உடனே சீரமைக்க தேவையான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று, வர போதிய போக்குவரத்து வசதிகள் இல்லை. இதனால் கிராம மக்கள் கூடுதல் செலவு செய்து ஆட்டோக்களில் வந்து செல்கிறார்கள். சிவகாசியில் இருந்து விஸ்வநத்தம் செல்லும் மினி பஸ்சும், சிவகாசியில் இருந்து பாறைப்பட்டி செல்லும் மினி பஸ்சும் ஆரம்ப சுகாதார நிலையம் வரை இயக்கினால் நோயாளிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story