ஐ.டி. ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகை திருடிய உறவுக்கார பெண் கைது


ஐ.டி. ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகை திருடிய உறவுக்கார பெண் கைது
x

பாளையங்கோட்டை அருகே ஐ.டி. ஊழியர் வீட்டில் 46½ பவுன் நகை திருடிய உறவுக்கார பெண் கைது செய்யப்பட்டார். மேலும் நகையை அடகு வைக்க உதவியாக இருந்த 2 பேரும் சிக்கினர்.

திருநெல்வேலி

நெல்லை பாளையங்கோட்டை அருகே கீழநத்தம் மேலூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சட்டநாதன். இவரது மகன் நம்பி (வயது 39). இவர் சென்னையில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த மாதம் கீழநத்தம் மேலூரில் நடந்த கோவில் விழாவில் குடும்பத்துடன் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவரின் உறவினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நம்பி தனது வீட்டில் பீரோவில் இருந்த 46½ பவுன் தங்க நகைகளை மர்மநபர் கொள்ளையடித்து சென்றதாக பாளையங்கோட்டை தாலுகா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து நம்பியின் வீட்டுக்கு வந்து சென்ற உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் நம்பியின் உறவுக்கார பெண்ணான பாளையங்கோட்டை சிவன் கோவில் மேலரதவீதியை சேர்ந்த ராஜகோபால்மகள் திவ்யா (28) என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் பதுங்கி இருந்த திவ்யாவை கைது செய்தனர். மேலும் அவருக்கு அங்கு நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுத்தர உதவியதாக, பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டை சேர்ந்த பாண்டியராஜ் (39), விருத்தாச்சலம் வடக்கு புதுப்பேட்டை லூக்காஸ் தெருவை சேர்ந்த சதீஷ் (30) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 46½ பவுன் நகைகள் மீட்கப்பட்டன. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story