தீயில் கருகி பெண் சாவு


தீயில் கருகி பெண் சாவு
x

தியாகதுருகம் அருகே குப்பையை எரித்தபோது தீயில் கருகி பெண் இறந்தாா்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

சின்னசேலம் அருகே உள்ள அனுமனந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரம் மகள் வசந்தி(வயது 33) என்பவருக்கும், தியாகதுருகம் அருகே உள்ள சுப்ரமணியபுரம் எஸ்.ஒகையூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவருக்கும் திருமணம் நடந்தது. செல்வம் மலேசியாவில் வேலை செய்து வருகிறார். வசந்தி, தனது குழந்தைகளுடன் சுப்ரமணியபுரத்தில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரவு வசந்தி, வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்தில் குப்பையை தீயிட்டு எரித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வசந்தியின் சேலையும் தீப்பற்றி எரிந்தது. வலியால் துடித்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வசந்தி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story