திண்டிவனத்தில்தூக்குப்போட்டு பெண் சாவுஅதிர்ச்சியில் கணவர் மயக்கம்


திண்டிவனத்தில்தூக்குப்போட்டு பெண் சாவுஅதிர்ச்சியில் கணவர் மயக்கம்
x
தினத்தந்தி 2 July 2023 12:15 AM IST (Updated: 2 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் தூக்குப்போட்டு பெண் உயிரிழந்தாா்.

விழுப்புரம்


திண்டிவனம்,

திண்டிவனம் ரோஷனை ஹாஸ்பிடல் ரோடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் மகன் முரளிதரன் (வயது 24). இவரது மனைவி சுவேதா (23). இவர்களுக்கு ஷிவானி (1½) பெண் குழந்தை உள்ளது. இவர்கள் சென்னை பெருங்களத்தூர் பகுதியில் குடித்தனம் நடத்தி வந்தனர்.

இந்தநிலையில், துக்க நிகழ்வு ஒன்றில் பங்கேற்க திண்டிவனம் வந்தவர்கள் முரளிதரன் வீட்டில் தங்கி இருந்தனர். இந்நிலையில் வீட்டில் இருந்த குளியலறையில் கம்பியில் சுவேதா தூக்குப்போட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சுவேதாவை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

இதற்கிடையே மனைவி தூக்கு போட்டுக்கொண்டதை அறிந்த முரளிதரன் மயக்கம் போட்டு விழுந்தார். அவரையும் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து ரோசணை போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.


Next Story