மாஞ்சான்விடுதி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


மாஞ்சான்விடுதி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x

மாஞ்சான்விடுதி ஊராட்சி அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டனர்.

புதுக்கோட்டை

திருவரங்குளம், பிப்.1-

திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், மாஞ்சான் விடுதி ஊராட்சி 100 நாள் வேலை செய்யும் மக்களுக்கு கடந்த 1 ஆண்டில் 6 நாள் மட்டுமே வேலை கொடுத்துள்ளனர். இதையடுத்து தொடர்ந்து 100 நாள் வேலை வழங்க கூறி மாஞ்சான் விடுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து போராட்டம் நடத்திய பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினா். அப்போது 2-ந்தேதி (வியாழக்கிழமை) முதல் தொடர்ந்து வேலை வழங்குவதாக உறுதி அளித்தனர். இதையடுத்து முற்றுகை ேபாராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story