பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தினவிழா


பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தினவிழா
x

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தினவிழா

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரியில் மகளிர் தினவிழா நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை அமலோர்பவசெல்வி தொகுத்து வழங்கினார். இதில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரி, நல்லாசிரியை சத்தியா ஆகியோர் கலந்துகொண்டு சாதனை பெண்மணிகள் கடந்து வந்த பாதையை பற்றி பேசினர். இதில் பட்டுக்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணினி பயிற்றுவிப்பாளர் சுமித்ரா, லோகப்பிரியா(காமன் வெல்த் கோல்டு மெடலிஸ்ட்), விஜயா(பிளாக் லெவல் பிரசிடெண்ட்), மல்லிகா (பிளாக் கோ ஆர்டினேட்டர்), பட்டுக்கோட்டை பாலிடெக்னிக் கல்லூரி முன்னாள் மேலாளர் ஜமுனாராணி(ஓய்வு), ஜான்சி(மரியா மருத்துவம் மற்றும் அழகுசாதனப்பொருட்களின் உரிமையாளர்), பவித்தா(ஹேம் மேக்கர்) ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். முடிவில் மவுரிய நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பிரீதிக்கா மற்றும் சிவகுமார் செய்திருந்தனர்.


Next Story