தனித்திறனை மேம்படுத்த உழைக்க வேண்டும்


தனித்திறனை மேம்படுத்த உழைக்க வேண்டும்
x

மாணவ-மாணவிகள் தனித்திறனை மேம்படுத்த உழைக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

விருதுநகர்


மாணவ-மாணவிகள் தனித்திறனை மேம்படுத்த உழைக்க வேண்டும் என கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

கலந்துரையாடல்

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற கலைத்திருவிழாவில் மாநில அளவில் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுடன் கலெக்டர் ஜெயசீலன் 'காபி வித் கலெக்டர்' என்ற நிகழ்ச்சியில் கலந்துரையாடினார். இந்தநிகழ்ச்சியில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவ-மாணவிகள் கலெக்டரிடம் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம் உள்ளிட்டவை குறித்து தெரிவித்தனர்.

இதில் கலெக்டர் ஜெயசீலன் பேசும் பொழுது, பள்ளி பருவத்திலேயே தங்களுக்கான தனித்திறமைகளை கண்டறிந்து திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் எந்த ஒரு பணியில் இருந்தாலும் தனித்திறமைகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

புத்துணர்வு அளிக்கிறது

தனித்திறமைகளை பாதுகாக்க வேண்டும் என்றால் அதற்கென்று தனியாக நேரம் ஒதுக்கி உழைக்க வேண்டும். உழைப்பினால் முடியாதது ஒன்றும் இல்லை. ஆதலால் திறமைகளை அனைவரும் வளர்த்துக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார். இந்த நிகழ்ச்சி எங்களுக்கு ஒரு புத்துணர்வு அளிப்பதாக மாணவர்கள் கூறினர். அத்துடன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த கலெக்டருக்கு நன்றியும் தெரிவித்தனர்.


Next Story