கட்டுமான பணியின் போது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி.
கட்டுமான பணியின் போது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அஞ்சுகிராமம்:
கட்டுமான பணியின் போது 4-வது மாடியில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
அஞ்சுகிராமம் அருகே நடந்துள்ள இந்த பரிதாப சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
தொழிலாளி பலி
அஞ்சுகிராமம் போலீஸ் சரகம் வட்டக்கோட்டை புதுக்குளம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இதில் நெல்லை மாவட்டம் கன்னன்குளத்தை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன் (வயது40) என்பவரும் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தார்.சம்பவத்தன்று 4-வது மாடியில் கட்டுமான பணியில் பாலமுருகன் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே அங்கு வேலை செய்து கொண்டு இருந்த தொழிலாளர்கள் ஓடி சென்று பால முருகனை தூக்கினார்கள். ஆனால் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விசாரணை
இதுகுறித்து அஞ்சுகிராமம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெசி மேனகா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
4-வது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்த பாலமுருகனுக்கு சுபாஸ்ரீ என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்