உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம்
நாகையில் நடந்த உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
நாகையில் நடந்த உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலத்தை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
உலக தாய்ப்பால் வார விழா
நாகை நீலாயதாட்சியம்மன் கோவில் முன்பு ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள் துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, கொடியசைத்து தொடங்கி வைத்தார். நீலாயதாட்சியம்மன் கோவில் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலமானது நீலா கீழே வீதி, நாகை கடை தெரு வழியாக ரெயில் நிலையத்தை சென்றடைந்தது.
தாய்ப்பாலின் சிறப்புகள்
குழந்தை பிறந்து 6 மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் அறிவு வளர்ச்சியடைகிறது. 2 வயது வரை தாய்ப்பால் பெறும் குழந்தைகளின் உணர்ச்சி திறன் அதிகரிக்கும் என்பன உள்ளிட்ட தாய்ப்பாலின் சிறப்புகள் குறித்து ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சியாமளா உள்பட அங்கன்வாடி ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளி வளாகத்தில்...
இதேபோல் திட்டச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில், மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் அறிவுறுத்தலின் பேரில், துணை இயக்குனர் (சுகாதார பணிகள்) விஜயகுமார் உத்தரவின்படி நடைபெற்ற உலக தாய்ப்பால் வார விழிப்புணர்வு ஊர்வலத்தை திருமருகல் வட்டார மருத்துவ அலுவலர் மணிசுந்தரம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.