உலக நுகர்வோர் தின விழா


உலக நுகர்வோர் தின விழா
x
தினத்தந்தி 2 April 2023 12:15 AM IST (Updated: 2 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சியில் உலக நுகர்வோர் தின விழா நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில், நுகர்வோர்களாகிய நாம் நம் கடின உழைப்பின் மூலமாக ஈட்டும் வருமானத்தின் வாயிலாக வாங்கும் பொருளையோ சேவையையோ தரமற்றதாக இருக்கும்பட்சத்தில் நாம் பாதிப்படைகிறோம். அவ்வாறு பாதிப்புகளில் இருந்து நம்மை தற்காத்துக்கொள்வது நுகர்வோரின் கடமையாகும். நுகர்வோர்கள் தாங்கள் வாங்கும் பொருட்கள், சேவைகள்

தொடர்பான குறைபாடுகள், பொருட்கள் போலியான தன்மை என தெரிய வந்தால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் நுகர்வோர் மாவட்ட, மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் அளிக்கலாம் என்றார். தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு நுகர்வோர் உரிமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. இதேபோல் தன்னார்வ நுகர்வோர் அமைப்பில் நல்ல முறையில் செயல்பட்ட வட்ட நுகர்வோர் விழிப்புணர்வு சங்க செயலாளருக்கு பாராட்டு சான்றிதழை கலெக்டர் வழங்கினார். முன்னதாக எரிவாயு சிலிண்டர் மற்றும் எடை எந்திரம் குறித்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஷெர்லி ஏஞ்சலா, முதன்மை கல்வி அலுவலர் சரஸ்வதி, கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் பவித்ரா, கள்ளக்குறிச்சி நுகர்வோர் விழிப்புணர்வு சங்க செயலாளர் அருண்கென்னடி, அரியலூர் வட்டார நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கதலைவர் மணி, திருக்கோவிலூர் நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் மோகன், மக்கள் உரிமை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் சுப்பிரமணியன், குடிமைபொருள் தாசில்தார் கோபாலக்கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story