விருதுநகர், சிவகாசி கோர்ட்டுகளில் யோகா தினம்


விருதுநகர், சிவகாசி கோர்ட்டுகளில் யோகா தினம்
x

விருதுநகர், சிவகாசி கோர்ட்டுகளில் யோகா தினம் நடந்தது.

விருதுநகர்

சிவகாசி

விருதுநகர், சிவகாசி கோர்ட்டுகளில் யோகா தினம் நடந்தது.

உலக யோகா தினம்

உலக யோகா தினத்தை முன்னிட்டு சிவகாசியில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா குறித்த பயிற்சி நடைபெற்றது. இதில் சிவகாசி வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும், சார்பு நீதிபதியுமான முருகவேல், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பாரதி, குற்றவியல் நடுவர் நீதிபதிகள் ராஜேஷ்கண்ணன், அமலநாத கமலக்கண்ணன் மற்றும் கோர்ட்டு அலுவலர்கள், ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் ஹயக்ரீவாஸ் சர்வதேச பள்ளியில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் வெங்கடேஷ்பிரசாத் தலைமை தாங்கினார். தலைமை முதல்வர் பாலசுந்தரம் முன்னிலை வகித்தார். பள்ளியின் முதல்வர் அம்பிகாதேவி, தாளாளர் ஜெயக்குமார், துணை முதல்வர் ஞானபுஷ்பம், சுதா உள்பட கலர் கலந்து கொண்ட னர். நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

சாத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சாத்தூர் நீதித்துறை நடுவர்கள் பலவிதமான யோகாசனங்கள் செய்தனர்.அருப்புக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் யோகா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த பயிற்சியில் அருப்புக்கோட்டை நீதிமன்ற சார்பு நீதிபதி ராமலிங்கம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கலைநிலா, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முத்து இசக்கி ஆகியோர் கலந்து கொண்டனர். யோகா ஆசிரியர் சுந்தர்ராஜன் யோகா பயிற்சி அளித்தார். இந்த நிகழ்ச்சியில் யோகா செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து யோகா பயிற்சி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

விருதுநகர்

உலக யோகா தினத்தை ஒட்டி விருதுநகர் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த் குமார் தலைமையில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் நீதிபதி ஹேமந்த்குமார். சார்பு நீதிபதி ராஜ்குமார். உரிமையியல் நீதிபதி சிந்துமதி மற்றும் நீதிபதி கவிதா மற்றும் நீதிமன்றப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

விருதுநகர் காமராஜர் வித்தியாசாலையில் மாணவர்களின் யோகா நிகழ்ச்சியை கிழக்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாண்டுரங்கன் தொடங்கி வைத்தார். கே.வி.எஸ். மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவர் படையினர் சார்பில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.

உலக யோகா தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் கேசா டி மிர் பள்ளியில் 21 மாணவர்கள், 21 வடிவத்தில் 21 சூரிய நமஸ்காரம் 21 நிமிடங்களில் செய்து குளோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தனர்.


Next Story