கல்லூரி மாணவரை தாக்கிய வாலிபர் கைது


கல்லூரி மாணவரை தாக்கிய வாலிபர் கைது
x

கல்லூரி மாணவரை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

நாமக்கல் மாவட்டம், மோகனூர் பகுதியை சேர்ந்த சிவா (வயது 19). இவர் கரூரில் உள்ள வேளாண் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று முத்துராஜாபுரம் அருகே உள்ள கல்லூரி கேட் அருகே சிவா நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (21), தமிழ்செல்வன் (22), ராஜேஷ் (21) ஆகிய 3 பேரும் சிவாவை தாக்கி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதில் காயம் அடைந்த சிவா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கன்னிகுமார் வழக்குப்பதிந்து, தமிழ்செல்வனை கைது செய்தார். தப்பியோடி கார்த்திக், ராஜேஷ் ஆகிய 2 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story