மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பத்தூர்
வாணியம்பாடி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார் செட்டியப்பனூர் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஆம்பூர்பேட்டையைச் சேர்ந்த விஜய் (வயது 20) என்ற வாலிபர் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை செய்தபோது முன்னுக்கு பின் முரணாக பேசினார். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் ஓட்டிவந்த மோட்டார்சைக்கிள் திருடப்பட்டது என்பது தெரியவந்தது. மேலும் அவர் அளித்த தகவலின் பேரில் மேலும் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அவரிடம் இருந்து 2 செல்போன்களையும் போலீசார் கைப்பற்றினார்.
இது தொடர்பாக வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story