குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x

நாகர்கோவிலில்குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில் புதுக்குடியிருப்பு காமராஜர்புரத்தை சேர்ந்தவர் ஸ்டீபன்ராஜ் (வயது27). இவர் மீது கன்னியாகுமரி, நேசமணி நகர், குலசேகரம், வடசேரி உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் உள்ளது. இவர் போலீசாரின் எச்சரிக்கையை மீறி தொடர்ந்து குற்ற செயலில் ஈடுபட்டு வந்தார். குலசேகரம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு நாகர்கோவிலில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பரிந்துரை செய்தார். அதை தொடர்ந்து ஸ்டீபன்ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார். அதன்படி ஸ்டீபன் ராஜை குண்டர் சட்டத்தில் கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டார்.

இதேபோல் நாகர்கோவில் புத்தேரி ஆனைப்பொற்றை பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார் (25). இவர் மீது கோட்டார், பூதப்பாண்டி, வடசேரி ஆகிய போலீஸ் நிலையங்களில் வழக்குகள் உள்ளது. வடசேரி போலீஸ் நிலையத்தில் பாலியல் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அவரை பாலியல் குற்ற தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண்பிரசாத் பரிந்துரை செய்தார். அதன்படி சந்தோஷ்குமாரை கைது செய்ய கலெக்டர் அரவிந்த் உத்தரவிட்டார் . அதன்படி சந்தோஷ் குமாரை பாலியல் குற்ற தடுப்புச் சட்டத்தில் வடசேரி இன்ஸ்பெக்டர் திருமுருகன் கைது செய்ய மாவட்ட சிறை அதிகாரிகளிடம் உத்தரவு நகலை வழங்கி நடவடிக்கை மேற்கொண்டார்.


Next Story