யூடியூபர் கார்த்திக் கோபிநாத் வழக்கு: வசூலித்த தொகையை விசாரணை கோர்ட்டுக்கு மாற்ற ஐகோர்ட்டு உத்தரவு
யூடியூபர் கார்த்திக் கோபிநாத் வசூலித்த தொகையை, விசாரணை கோர்ட்டுக்கு மாற்ற, மிலாப் செயலி நிறுவனத்திற்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
கோவில் திருப்பணிக்களுக்காக, யூடியூபர் கார்த்திக் கோபிநாத் வசூலித்த தொகையை, விசாரணை கோர்ட்டுக்கு மாற்ற, மிலாப் செயலி நிறுவனத்திற்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிகளுக்காக வசூலித்த 30 லட்சம் ரூபாயை கோவில் திருப்பணி கணக்கில் செலுத்த அனுமதி கோரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் தாக்கல் செய்த மனு நீதிபதி ஆதிகேசவலு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவில் திருப்பணிகளுக்காக வசூலித்த தொகையை விசாரணை கோர்ட்டுக்கு மாற்ற மிலாப் செயலிக்கு உத்தரவிட்ட நீதிபதி, நன்கொடையாளர்கள் குறித்த விவரங்களை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கை கோவில் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் கொன்ட சிறப்பு அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story