அ.தி.மு.க. கேட்ட தொகுதிகளை கொடுக்கவில்லை சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை


அ.தி.மு.க. கேட்ட தொகுதிகளை கொடுக்கவில்லை சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை
x
தினத்தந்தி 11 March 2021 3:53 AM IST (Updated: 11 March 2021 3:53 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கேட்ட தொகுதிகளை கொடுக்கவில்லை சட்டசபை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை ஏ.சி.சண்முகம் அறிக்கை.

சென்னை, 

புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ் மரபினர்களின் இதயத்தில் இடம் பெற்றுள்ள புதிய நீதிக்கட்சிக்கு தேர்தல் களத்தில் முக்கிய பங்காற்றி வரும் அ.தி.மு.க அணியில் சரியான பிரதிநிதித்துவம் தரும் வகையில் போட்டியிட வேண்டுகோள் வைத்து முதலில் 11 தொகுதிகள் முன்வைத்து அதில் 5 தொகுதிகள் கேட்கப்பட்டது. நாங்கள் கேட்ட தொகுதிகள் ஏதும் ஒதுக்கி தரப்படவில்லை. கேட்கப்பட்ட எண்ணிக்கையிலும் தொகுதிகள் தரவில்லை.எனவே இந்த தேர்தலில் போட்டியிட புதிய நீதிக்கட்சி விரும்பவில்லை. தொடர் நடவடிக்கை குறித்து விரைந்து நடைபெற உள்ள மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story