விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை - கே.எஸ். அழகிரி குற்றச்சாட்டு
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.
தேர்தல் களத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க. கூட்டணி, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் குதித்துள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு ஆதரவாக அத்தொகுதியில் இன்று பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது அவர், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை. மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு எந்த சிறப்பு நிதியும் பெறவில்லை. ஒரே மொழி, ஒரே மதம் என்பது நாட்டை பிளவுப்படுத்தும் கொள்கை' என மத்திய பாஜக அரசை விமர்சித்து பேசினார்.
Related Tags :
Next Story