மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்


மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 30 March 2021 12:03 AM IST (Updated: 30 March 2021 12:03 AM IST)
t-max-icont-min-icon

தேனி மாவட்டத்தில் போடி, ஆண்டிப்பட்டி தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி தொடங்கியது.

தேனி:

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 6-ந்தேதி நடக்கிறது. தேனி மாவட்டத்தை பொறுத்தவரை ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. 

இந்த தேர்தலில் ஆண்டிப்பட்டியில் 20 பேர், பெரியகுளத்தில் 15 பேர், போடியில் 24 பேர், கம்பத்தில் 15 பேர் என 4 தொகுதிகளிலும் மொத்தம் 74 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 

இந்த வேட்பாளர்களின் பெயர், புகைப்படம், சின்னங்கள் ஆகியவற்றை மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் பொருத்தும் பணி நேற்று தொடங்கியது. 

முதற்கட்டமாக ஆண்டிப்பட்டி, போடி தொகுதியில் இந்த பணிகள் நேற்று தொடங்கியது. 

இந்த பணியில் 100-க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டிப்பட்டியில் தேர்தல் நடத்தும் அலுவலர் சிவசுப்பிரமணியன், வேட்பாளர்கள் மற்றும் வேட்பாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் முன்னிலையில் பணிகள் நடந்தன. 

பெரியகுளம், கம்பம் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. 

Next Story