மயிலாப்பூர் மக்களின் குரலாக இருப்பேன் - ம.நீ.ம. வேட்பாளர் ஸ்ரீ பிரியா பேச்சு


மயிலாப்பூர் மக்களின் குரலாக இருப்பேன் - ம.நீ.ம. வேட்பாளர் ஸ்ரீ பிரியா பேச்சு
x
தினத்தந்தி 31 March 2021 8:53 AM GMT (Updated: 2021-03-31T14:23:05+05:30)

மயிலாப்பூர் மக்களின் குரலாக இருப்பேன்; ஏழை மக்களின் வாழ்வை மேம்படுத்துவேன் என்று மயிலாப்பூர் தொகுதி மக்கள் நீதிமய்யம் வேட்பாளர் ஸ்ரீபிரியா தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

தேர்தல் களத்தில் அதிமுக கூட்டணி, திமுக கூட்டணி, அமமுக கூட்டணி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சி என்று 5 முனை போட்டி நிலவுகிறது. சுயேச்சை வேட்பாளர்கள் பலரும் போட்டி களத்தில் உள்ளனர். தேர்தல் தேதி நெருங்கி வருவதால் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் நடிகை ஸ்ரீ பிரியா போட்டியிடுகிறார். அவர் மைலாப்பூர் தொகுதிக்கு உள்பட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். 

மைலாப்பூர் தொகுதிக்கு உள்பட்ட மந்தைவெளி பகுதியில் ஸ்ரீபிரியா இன்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், மைலாப்பூரில் இதுவரை வெற்றிபெற்றவர்கள் ஒருவரை ஒருவர் மாறிமாறி குறை சொல்கிறார்களே தவிர தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. இதுவரை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்கள் மக்களின் நிலையை உயர்த்தவில்லை. மைலாப்பூரை சேர்ந்த எனக்கு வாய்ப்பளிக்க வேண்டும். மயிலாப்பூர் மக்களின் குராலாக இருப்பேன்’ என்றார். 

Next Story