அசாம் சட்டமன்ற தேர்தல்: பாஜக ஆட்சியை தக்க வைக்குமா? சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை
அசாமில் பாஜக தலைமையிலான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சர்பானந்த சோனாவால் உள்ளார்.
கவுகாத்தி,
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கு 2 கட்டத் தேர்தல்கள் கடந்த மார்ச் 27 மற்றும் ஏப்ரல் 1ம் தேதி நடந்தமுடிந்துவிட்டன. இறுதிக்கட்டமாக 40 தொகுதிகளுக்கு ஏப்ரல் 6-ம் தேதி நடைபெற்றது.
இந்த நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. அசாமில் பாஜக தலைமையிலான ஆட்சி தற்போது நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக சர்பானந்த சோனாவால் உள்ளார்.
இந்த தேர்தலில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவும் எனத்தெரிகிறது. தேர்தல் முடிவுகளை தெரிந்து கொள்ள மக்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.
Related Tags :
Next Story