விளாத்திக்குளம் தொகுதியில் திமுக வேட்பாளர் மார்கண்டேயன் வெற்றி
திமுக வேட்பாளர் மார்கண்டேயன் விளாத்திக்குளம் தொகுதியில் 89,130 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
தூத்துக்குடி,
தமிழகத்தில் இன்று 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி திமுக 150 இடங்களிலும், அதிமுக 83 இடங்களிலும், மக்கள் நீதி மய்யம் ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
அனைத்து தொகுதிகளிலும் பல சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தொகுதியில், இன்று 24 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே திமுக வேட்பாளர் ஜீ.வி. மார்க்கண்டேயன் முன்னிலை வகித்து வந்தார்.
இதையடுத்து வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வேட்பாளர் ஜீ.வி. மார்க்கண்டேயன் 89,130 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பி. சின்னப்பன் 51,237 வாக்குகளை பெற்றுள்ளார். இந்த தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பாலாஜி 11,697 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பெற்றுள்ளார்.
Related Tags :
Next Story