தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துசெல்ல என் வாழ்த்துக்கள்: மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து


கோப்புக்காட்சி
x
கோப்புக்காட்சி
தினத்தந்தி 2 May 2021 5:31 PM GMT (Updated: 2 May 2021 5:31 PM GMT)

தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துசெல்ல என் வாழ்த்துக்கள் என மு.க.ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த சட்டப்பேரவை தேர்தலில் 160 இடங்களில் கைப்பற்றி திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் தேர்தல் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், நடிகர் ரஜினிகாந்த் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், மு.க.ஸ்டாலினுக்கு கமல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், 

பெருவெற்றி பெற்றுள்ள மு.க.ஸ்டாலினுக்கு மனப்பூர்வமான பாராட்டுக்கள். நெருக்கடியான காலகட்டத்தில் தமிழகத்தின் முதல்வராக பொறுப்பேற்கிறீர்கள். சிறப்பாக செயல்பட்டு தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் அழைத்துசெல்ல என் வாழ்த்துக்கள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story