ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர்கள் 2 பேரும் வெற்றி


ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர்கள் 2 பேரும் வெற்றி
x
தினத்தந்தி 2 May 2021 7:54 PM GMT (Updated: 2 May 2021 7:54 PM GMT)

ஈரோடு மாவட்டத்தில் போட்டியிட்ட அமைச்சர்கள் 2 பேரும் வெற்றிவாகை சூடியுள்ளனர்.

ஈரோடு,

தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபிசெட்டிபாளையம், பவானிசாகர் (தனி) என 8 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 128 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இதில் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் தொகுதியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டார். கோபி என்றால் செங்கோட்டையன் என்ற ஒரு புகழை பெற்றிருக்கும் அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தி.மு.க. வேட்பாளர் மணிமாறணை விட 28 ஆயிரத்து 477 வாக்குகள் முன்னிலை பெற்று 9-வது முறையாக எம்.எல்.ஏ. ஆனார். மீண்டும் கோபி தொகுதியில் வெற்றி பெற்று சாதனை படைத்தார்.

இதுபோல் தமிழக அமைச்சரவையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்த கே.சி.கருப்பணன் மீண்டும் பவானி தொகுதியில் போட்டியிட்டார். அவரும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று உள்ளார். பவானி தொகுதியில் 3-வது முறையாக இவர் வெற்றி பெற்று உள்ளார். 

ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை ஏற்கனவே பதவியில் இருந்து, மீண்டும் போட்டியிட வாய்ப்பு பெற்ற 2 அமைச்சர்களும் வெற்றிவாகை சூடி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story