அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு தகுதி


அமெரிக்க ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 11 Sep 2021 3:38 AM GMT (Updated: 11 Sep 2021 3:38 AM GMT)

இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெத்வதேவை ஜோகோவிச் எதிர்கொள்ள உள்ளார்.

நியூயார்க், 

‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி இன்று  அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டம் ஒன்றில்  ஜோகோவிச் (செர்பியா) - ஸ்வரேவ் (ஜெர்மனி) மோதினர்.  

மிகவும் பரபரப்பாக இந்தப் போட்டி நடைபெற்றது. தரவரிசையில் முதலிடத்தில் வகிக்கும் ஜோகோவிச்சுக்கு 4-ஆம் நிலை வீரரான ஸ்வரேவ் கடும் சவால் அளித்தார். 

எனினும், சுதாரித்து விளையாடிய ஜோகோவிச் 4-6, 6-2, 6-4,4-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இறுதிப்போட்டிக்கு ஜோகோவிச் முன்னேறினார். இறுதிப்போட்டியில் ரஷ்ய வீரர் மெட்வதேவை ஜோகோவிச் எதிர்கொள்கிறார்.  

இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள ஜோகோவிச், 4-வது முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்ல முனைப்பு காட்டி வருகிறார். 

Next Story