உலக செய்திகள்

19 மணி நேர பயணத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்த விண்வெளி வீரர்கள் + "||" + Watch: Astronauts Enter International Space Station After 19-Hour Journey

19 மணி நேர பயணத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்த விண்வெளி வீரர்கள்

19 மணி நேர பயணத்தில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்த விண்வெளி வீரர்கள்
19 மணி நேர பயணத்திற்கு பிறகு சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்த நாசா விண்வெளி வீரர்கள்.
நியூயார்க், 

நாசாவை சேர்ந்த இரண்டு விண்வெளி வீரர்கள் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் விண்ணில் உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு அனுப்பபட்டனர்.

நாசாவின் இரண்டு விண்வெளி வீரர்களை அழைத்துக் கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் நேற்று முன்தினம் வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டது. 

நாசாவை சேர்ந்த பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி  2  வீரர்களும் ஞாயிற்றுக்கிழமை சர்வதேச விண்வெளி நிலையத்திற்குள் நுழைந்தனர், கிட்டத்தட்ட 19 மணிநேர பயணத்திற்கு சர்வதேச விண்வெளி ஆய்வுமையத்தை சென்றடைந்தனர்.

விண்வெளி மையத்தில் அவர்களை அமெரிக்க விண்வெளி வீரர் கிறிஸ் காசிடி, விண்வெளி வீரர்களான அனடோலி இவானிஷின் மற்றும் இவான் வாக்னர் ஆகியோர் வரவேற்றனர், 

நாசா நிர்வாகி ஜிம் பிரிடென்ஸ்டைன் ஹூஸ்டனில் பணி கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து  சர்வதேச  விண்வெளி  ஆய்வு குழுவினருடன் பேசினார்.

பாப் மற்றும் டக் ஆகியோர் வருக உலகம் முழுவதும் இந்த பணியைக் கண்டுள்ளதாக நான் உங்களுக்குச் சொல்வேன், எங்கள் நாட்டிற்காக நீங்கள் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம் என கூறினார். 

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் உலகம் சூழ்ந்திருக்கும் இந்த நேரத்தில் இந்த பணி அமெரிக்கர்களை ஊக்குவிக்கும் என்று தான் நம்புவதாக விண்வெளி வீரர் ஹர்லி கூறினார்.

கடந்த பல மாதங்களாக, இந்த உயர்ந்த இலக்குகளை அடைய, குறிப்பாக அமெரிக்காவில் உள்ள இளைஞர்களை ஊக்குவிப்பதற்காக,  நாம் காட்டிய ஒரு முயற்சி இது," என்று அவர் மேலும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. சூரியனை சுற்றும் சிறுகோளில் மாதிரியை கைப்பற்றி நாசா விண்கலம் வரலாற்று சாதனை
11 அடி நீளமுடைய ரோபோ கை மூலமாக பென்னுவின் வட துருவ கற்களின் மாதிரியை கைப்பற்றியவிண்கலம்.இதன் மூலம் எதிர்காலத்தில் அறிவியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிபிறக்கும் என்று கருதப்படுகிறது.
2. நிலாவை சொந்தமாக்கும் முயற்சி: 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் நாசா ஒப்பந்தம் போட்டு உள்ளது.
3. நாசா வெளியிட்ட வெடிக்கும் நட்சத்திரத்தின் வீடியோ
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா வெடிக்கும் நட்சத்திரத்தின் வீடியோவை வெளியிட்டுள்ளது.
4. விண் வெளி குப்பைகளுடன் மோதலைத் தவிர்க்க சர்வதேச விண்வெளி நிலையம் நகர்த்தப்பட்டது
விண் வெளி குப்பைகளுடன் மோதலைத் தவிர்க்க சர்வதேச விண்வெளி நிலையம் நகர்த்தப்பட்டது. இந்தாண்டில் நடந்த 3 வது நகர்த்தல் இதுவாகும்.
5. விண்வெளியில் 2 மாத ஆய்வுக்கு பின்னர் வெற்றிகரமாக பூமி திரும்பிய நாசா விண்வெளி வீரர்கள் !
அமெரிக்காவில் உள்ள, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்காக, க்ரூ டிராகன் விண்கலமுடன் கூடிய பால்கன் 9 ரக ராக்கெட்டை தயாரித்திருந்தது.