தேசிய செய்திகள்

‘இரண்டு இந்தியா’ - மேடை காமெடியன் வீர் தாஸ் கருத்து; பா.ஜ.க எதிர்ப்பு! + "||" + Vir Das finds support in Kapil Sibal in 'Two Indias' row, Congress leader calls Indians 'intolerant and hypocritical'

‘இரண்டு இந்தியா’ - மேடை காமெடியன் வீர் தாஸ் கருத்து; பா.ஜ.க எதிர்ப்பு!

‘இரண்டு இந்தியா’ - மேடை காமெடியன் வீர் தாஸ் கருத்து; பா.ஜ.க எதிர்ப்பு!
தாஸ் அவருடைய முழு வீடியோவில் இருந்து, 6 நிமிட யூடியூப் வீடியோ கிளிப்பிங்கை வெளியிட்டுள்ளார்.
புதுடெல்லி,

மேடை காமெடியன் வீர் தாஸ் உலக அளவில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பார்வையாளர்கள் வீற்றிருக்கும் நகைச்சுவை அரட்டை அரங்கத்தில் சமீபத்தில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அதன் வீடியோ வெளியாகி பரபரப்பாகி உள்ளது.

தாஸ் அவருடைய முழு வீடியோவில் இருந்து, 6 நிமிட யூடியூப்  வீடியோ கிளிப்பிங்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ‘நாட்டின் இரு வேறு நிலைப்பாடு குறித்து பேசியுள்ளார். அதனுடன் சேர்த்து நாட்டின் முக்கிய பிரச்சினைகள், கொரோனாவை எதிர்த்து போராடிய விதம், பாலியல் வன்கொடுமைகள், விவசாயிகள் மற்றும் நகைச்சுவை பேச்சாளர்களின் மீது உள்ள அடக்குமுறை’ போன்ற விஷயங்களையும் பேசியுள்ளார்.  

இந்த சர்ச்சை வீடியோ தொடர்பாக பாஜகவை சேர்ந்த செய்தித் தொடர்பாளர் ஆதித்யா ஜா புகார் அளித்துள்ளார். அதில், “நடிகரும் நகைச்சுவை பேச்சாளருமான வீர் தாஸ் சர்ச்சைக்குரிய விதத்தில் இந்தியா குறித்து பேசியுள்ளார்.  இந்தியர்கள் பகலில் பெண்களை வணங்குவார்கள். ஆனால், இரவில் பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குவார்கள் என்று பேசியுள்ளார். இதுபோன்ற இழிவான கூற்றுகளை அவர் சர்வதேச அரங்கில் பேசி பெண்களையும் நாட்டையும் இழிவுபடுத்தியுள்ளார்” என்று ஆதித்யா ஜா தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து டெல்லி போலீஸ் துணை ஆணையர் தீபக் யாதவ் கூறுகையில், தற்போதைக்கு  புகார் பெறப்பட்டுள்ளது என்றும் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், மேடை காமெடியன் வீர் தாசுக்கு ஆதரவு பெருகி உள்ளது. முன்னதாக சசி தரூர் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது காங்கிரசின் மூத்த தலைவர் கபில் சிபல் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது,  “வீர் தாஸ், இரண்டு இந்தியா உள்ளது என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை. உலகத்திற்கு அதை பற்றி ஒரு இந்தியர் சொல்லித் தான் தெரிய வேண்டியதில்லை. நாம் சகிப்புத்தன்மை அற்றவர்களாகவும் பாசாங்குத்தனமாகவும் இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசுக்கு ஏழைகளை பற்றி அக்கறையில்லை: கபில் சிபல் விமர்சனம்
ஏழைகள் பற்றி பாஜகவுக்கு கவலை இல்லை எனவும் மத அரசியல் மட்டுமே அவர்கள் செய்வதாகவும் கபில் சிபல் கடுமையாக சாடியுள்ளார்.
2. ஷாருக்கான் மகன் வழக்கை பயன்படுத்தி லகிம்பூர் சம்பவத்தை திசைதிருப்ப முயற்சி- கபில் சிபல் குற்றச்சாட்டு
நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான், போதைப்பொருள் பயன்படுத்தியதற்கும், வைத்திருந்ததற்கும் ஆதாரம் இல்லை என கபில் சிபல் கூறியுள்ளார்.
3. காங்கிரசில் யார் முடிவெடுக்கிறார்கள் என்று தெரியவில்லை - கபில் சிபல் சர்ச்சைக் கருத்து!
நவ்ஜோத்சிங் சித்து ராஜினாமா குறித்து மூத்த காங்கிரஸ் தலைவர் கபில் சிபல் கருத்து தெரிவித்து உள்ளார்.
4. ஏழரை ஆண்டுகள், பெரும் சித்தரவதைக்கு உள்ளானேன்- காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வேதனை
சுனந்தா புஷ்கர் மரண வழக்கிலிருந்து அவரது கணவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சசி தரூரை டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று விடுவித்துள்ளது.