மாநில செய்திகள்

அ.தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தொண்டர்கள் திடீர் போராட்டம் + "||" + AIADMK District Secretaries Meeting: Volunteers protest abruptly

அ.தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தொண்டர்கள் திடீர் போராட்டம்

அ.தி.மு.க.மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தொண்டர்கள் திடீர் போராட்டம்
சென்னை ராயப்பேட்டையில், எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
சென்னை

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்த நிலையில், 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க. அமோக வெற்றி பெற்றது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் இந்த தேர்தல் நடப்பதால், வெற்றியை கோட்டைவிட்டு விடக்கூடாது என அ.தி.மு.க. நினைக்கிறது. வெற்றிக்கான வியூகம் வகுப்பதற்காக  இன்று அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக நிர்வாகிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம் கூடி உள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று  காலை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில், அவைத் தலைவரை தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கட்சியின் வேட்பாளர்களை எவ்வாறு தேர்வு செய்வது?, ஒரே இடத்துக்கு பலர் போட்டியிட விருப்பம் தெரிவித்தால், அதை எந்த முறையில் அணுகுவது? என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல், அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என்று சொல்லிக்கொண்டு சசிகலாவும் சுற்றுப் பயணம் செய்து வருவதால், அதன் தாக்கம் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது குறித்தும் முக்கியமாக பேசப்பட இருக்கிறது. எனவே, இன்று நடைபெறும் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்திற்கு முன் தொண்டர்கள் சிலர் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் லத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேஷை மாற்றக்கோரி அவர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. 2-வது நாளாக அ.தி.மு.க அலுவலகத்தில் பரபரப்பு...! விருப்பமனு வாங்க வந்தவர்கள் மீது தாக்குதல்...!
2-வது நாளாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு வாங்க வந்தவர்கள் விரட்டி அடிக்கப்பட்டனர்.
2. அ.தி.மு.க. உட்கட்சி தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரி முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி வழக்கு
தேர்தலுக்கு முன்னர் பின்பற்றப்பட வேண்டிய விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், பொது செயலாளர் அதிகாரத்தை அபகரிக்கும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டி உள்ளார்.
3. ஓ.பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமிக்கு அதிக அதிகாரம் ; அ.தி.மு.க.அமைப்பு விதியில் முக்கிய திருத்தம்
ஓ.பன்னீர் செல்வம்- எடப்பாடி பழனிசாமிக்கு அதிக அதிகாரம் வழங்க அ.தி.மு.க.அமைப்பு விதியில் முக்கிய திருத்தம் செய்து செயற்குழு கூட்டத்தில் 3 சிறப்பு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
4. அ.தி.மு.க. தற்காலிக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம்
அ.தி.மு.க.வில் இருந்து அன்வர் ராஜா நீக்கப்பட்ட நிலையில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தமிழ்மகன் உசேனுக்கு அவைத் தலைவர் பதவி கிடைத்துள்ளது.
5. அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் எடப்பாடிக்கு எதிராக செங்கோட்டையனா...?
அ.தி.மு.க. வை வழிகாட்டுதல் குழுதான் நடத்த வேண்டும் என மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செங்கோட்டையன் வலியுறுத்தினார்.