தேசிய செய்திகள்

சர்வதேச விமான சேவை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்; மத்திய அரசு + "||" + International flight services to normalise very soon: Civil Aviation Secy

சர்வதேச விமான சேவை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்; மத்திய அரசு

சர்வதேச விமான சேவை விரைவில் இயல்பு நிலைக்கு திரும்பும்;  மத்திய அரசு
கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது.
புதுடெல்லி,

சீனாவின் உகான் நகரில் கடந்த 2019 ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் முதன் முதலாக கண்டறியப்பட்டது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 23 ஆம் தேதி முதல் சர்வதேச போக்குவரத்தை மத்திய அரசு நிறுத்தியது.

 தொற்று பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் தற்போது வரை விமானபோக்குவரத்து சேவை இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.  ”ஏர்  பபுள்” என்ற கொரோனா தடுப்பு விதிகளுடன் 25 நாடுகளுக்கு மட்டும் விமான சேவையை இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி மட்டுமே விமானங்கள்  இயக்கப்பட்டு வருகின்றன. தற்போது தொற்று பரவல்  குறைந்து பெரும்பாலான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது. 

இந்த நிலையில்,  நடப்பு ஆண்டு  இறுதிக்குள், சர்வதேச விமான சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுவதாக விமான போக்குவரத்து துறை செயலாளர் ராஜீவ் பன்சால் தெரிவித்துள்ளார். 

இது குறித்து மேலும் கூறுகையில், “ இயல்புநிலைக்கு திரும்புவதில் அரசு கவனம் செலுத்திவரும் அதே சமயத்தில் அதிகரித்துவரும் கொரோனா பரவலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுவருகின்றன. குறிப்பாக, பல ஐரோப்பிய நாடுகளில் அச்சப்படக் கூடிய அளவில் கொரோனா அதிகரித்துள்ளது” என்றார். 


தொடர்புடைய செய்திகள்

1. மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டம் - சென்னை மாநகராட்சிக்கு விருது
தூய்மை இந்தியா திட்டத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
2. மத்திய அரசின் அவரச சட்டங்களை எதிர்த்து மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வர எதிர்கட்சிகள் திட்டம்
மத்திய அரசின் அவரச சட்டங்கள் தொடா்பாக நாடாளுமன்றக் குளிா்கால கூட்டத்தொடரில் மத்திய அரசுக்கு நெருக்கடி அளிக்க எதிா்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
3. மாநிலங்களிடம் 13.76 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன: மத்திய அரசு
இந்தியாவில் இதுவரை 106.85 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
4. மத்திய அரசுக்கு ஏழைகளை பற்றி அக்கறையில்லை: கபில் சிபல் விமர்சனம்
ஏழைகள் பற்றி பாஜகவுக்கு கவலை இல்லை எனவும் மத அரசியல் மட்டுமே அவர்கள் செய்வதாகவும் கபில் சிபல் கடுமையாக சாடியுள்ளார்.
5. மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை மந்திரி இன்று ஆலோசனை
இந்த ஆலோசனையின் போது தடுப்பூசி போடும் பணியை மேலும் விரைவு படுத்துவது குறித்து பேசப்படும் என்று கூறப்படுகிறது.