மாநில செய்திகள்

சென்னை, கடலுார், புதுச்சேரியில் இன்று கனமழை + "||" + Heavy rain in Chennai, Kadalur and Pondicherry today

சென்னை, கடலுார், புதுச்சேரியில் இன்று கனமழை

சென்னை, கடலுார், புதுச்சேரியில் இன்று கனமழை
சென்னை, கடலுார், விழுப்புரம், புதுச்சேரியில் இன்று கனமழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் அளித்துள்ள பேட்டியில், தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, தற்போதைய சூழலில், குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் வாய்ப்பில்லை.

நிலப்பகுதிக்கும், கடல் பகுதிக்கும் இடையே காற்றின் அழுத்தத்தில் பெரிய வித்தியாசம் ஏற்படாததால் வளிமண்டல சுழற்சி வலுப்பெறாமல் அப்படியே நீடிக்கிறது.

வளிமண்டல சுழற்சியால் 28ந்தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும். இன்று முதல் நாளை காலை 8:30 மணி வரையிலான காலகட்டத்தில், கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் 20 செ.மீ. வரை மிக கனமழை பெய்யும். இந்த பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடப்பட்டுள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, கடலுார், விழுப்புரம், மதுரை, புதுக்கோட்டை, தேனி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கனமழை பெய்யும். மற்ற மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்.  நாளை காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

1. கனமழை எதிரொலி : தென் மாநிலங்களில் மீண்டும் அதிகரிக்கும் தக்காளி விலை
தொடர் மழையால் தென் மாநிலங்களில் தக்காளியின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது.
2. கனமழை: கரூரில் 1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை
கனமழை காரணமாக கரூரில் 1-8ம் வகுப்புகளுக்கு இன்று பள்ளிகள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
3. ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கனமழை
ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையத்தில் கனமழையால் 13 வீடுகள் இடிந்து சேதமடைந்தன.
4. கரூரில் கொட்டித்தீர்த்த கனமழை
கரூரில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் வீடுகளில் மழைநீர் புகுந்தது.
5. கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை?
கனமழை காரணமாக சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.