தேசிய செய்திகள்

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசுக்கு அச்சம்: ராகுல் காந்தி விமர்சனம் + "||" + Unfortunate that farm laws repealed without discussion, says Rahul Gandhi

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசுக்கு அச்சம்: ராகுல் காந்தி விமர்சனம்

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசுக்கு அச்சம்: ராகுல் காந்தி விமர்சனம்
விவாதங்கள் இன்றி வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என ராகுல் காந்தி சாடியுள்ளார்.
புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். விவசாயிகளின் எதிர்ப்புக்கு பணிந்த மத்திய அரசு 3 வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்தது.

இதன்படி,  மூன்று வேளாண் சட்டங்களையும்  ரத்து செய்யும் மசோதா  நாடாளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. விவாதங்கள் இன்றி இந்த மசோதாக்கள்  இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், இது குறித்து மத்திய அரசை சாடியுள்ள  காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி கூறியிருப்பதாவது:-

வேளாண் சட்டங்கள் குறித்து விவாதம் நடத்த மத்திய அரசு அச்சம் கொண்டுள்ளது. விவசாயிகள் உயிரிழப்பு தொடர்பாக விவாதம் நடைபெற்று இருக்க வேண்டும். விவாதம் இன்றி வேளாண் சட்டங்கள் திரும்ப பெறப்பட்டது மத்திய அரசின் பலவீனத்தையே காட்டுகிறது.  3 வேளாண் சட்டங்களும் திரும்ப பெறப்படும் என்பது எங்களுக்கு நன்கு தெரியும்” என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. மாநிலங்களின் ஒத்துழைப்பு தேவை... மத்திய அரசு மட்டுமே வளர்ச்சியை ஏற்படுத்த முடியாது - நிதின் கட்காரி
ரூ.350 லட்சம் கோடி பொருளாதாரத்தை எட்டும்வகையில், பிரதமரின் ‘கதி சக்தி’ திட்டத்தை விரைவுபடுத்த மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று நிதின் கட்காரி அழைப்பு விடுத்துள்ளார்.
2. ‘ஏரியில் பாலம் கட்டும் இடம் சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ளது’ - மத்திய அரசு தகவல்
ஏரியில் பாலம் கட்டும் இடம், சீனாவின் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
3. பூஸ்டர் டோஸாக எந்த தடுப்பூசி போடப்படும்- மத்திய அரசு விளக்கம்
இந்தியாவில் வரும் ஜனவரி 10 முதல் பூஸ்டர் தடுப்பூசி பணிகள் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
4. ஒமைக்ரான் அதிகரிப்பு; மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை மற்றும் ஐ.சி.எம்.ஆர் கடிதம்
ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் சற்று காலதாமதம் ஆவதால் ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
5. பூஸ்டர் டோசாக எந்த தடுப்பூசி போடுவது? மத்திய அரசு விரைவில் முடிவு
முதல் 2 டோஸ் போட்ட தடுப்பூசியையே முன்எச்சரிக்கை டோசாக போடுவதா அல்லது வேறு தடுப்பூசியை போடுவதா என்பது குறித்து ஆராயப்படுகிறது.