பாகிஸ்தானிலும் 5,000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க முடிவு செனட்சபை பரிந்துரைக்கு அரசு எதிர்ப்பு


பாகிஸ்தானிலும் 5,000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க முடிவு செனட்சபை பரிந்துரைக்கு அரசு எதிர்ப்பு
x
தினத்தந்தி 20 Dec 2016 9:15 PM GMT (Updated: 2016-12-21T02:20:08+05:30)

இந்தியா 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த 2 மாதத்தில் பாகிஸ்தானும் அதிகபட்ச மதிப்புள்ள 5,000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க முடிவு செய்துள்ளது.

இஸ்லாமாபாத்,

இந்தியா 500, 1,000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என்று அறிவித்த 2 மாதத்தில் பாகிஸ்தானும் அதிகபட்ச மதிப்புள்ள 5,000 ரூபாய் நோட்டுகளை ஒழிக்க முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் செனட் சபையின் இந்த பரிந்துரையை அந்நாட்டு அரசு எதிர்த்துள்ளது. கள்ள நோட்டு புழக்கத்தை ஒழிக்கவும், வங்கி கணக்கை ஊக்குவிக்கவும், ஆவணமற்ற பொருளாதாரத்தை குறைக்கவும் 5,000 ரூபாய் நோட்டுகளை 3 முதல் 5 ஆண்டுகளுக்கு ஒழிக்க வேண்டும் என்று செனட் சபை தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

ஆனால் சட்ட மந்திரி ஷாகித் ஹமீது கூறும்போது, மூன்றில் ஒரு பங்கு உள்ள இந்த நோட்டுகளை ஒழிப்பது வர்த்தகத்தை பாதிக்கும். பொருளாதார ஸ்திரத்தன்மையை பாதிக்கும் என்பதால் செனட் சபையின் இந்த தீர்மானத்தை அரசு எதிர்க்கிறது என்று கூறியுள்ளார். 

Next Story