ரஷியாவின் டியு-154 ராணுவ விமானம் 91 பேருடன் மாயம்; புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடாரில் இருந்து மறைந்தது

ரஷியாவின் டியு-154 ராணுவ விமானம் 91 பேருடன் மாயம்; புறப்பட்ட சிறிது நேரத்தில் ரேடாரில் இருந்து மறைந்தது
x
தினத்தந்தி 25 Dec 2016 5:28 AM GMT (Updated: 2016-12-25T10:58:22+05:30)

சோச்சியில் இருந்து புறப்பட்ட விமானம் கருங்கடல் பகுதியில் ரஷிய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மறைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியது. விமானம் சோச்சியில் இருந்து புறப்பட்ட பின்னர் சுமார் 20 நிமிடங்கள் கழித்து ரேடாரில் இருந்து விலகிஉள்ளது. உள்ளூர் நேரப்படி காலை 5:20 மணியளவில் புறப்பட்ட விமானம் 5:40 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கிடையே விமானத்தை தேடும் பணியானது தொடங்கியது என உள்ளூர் மீடியாக்கள் தகவல் வெளியிட்டு உள்ளது.

மாஸ்கோர், 

ரஷியாவின் கோச்சி பகுதியில் இருந்து புறப்பட்டு சென்ற டியு-154 ரக ராணுவ விமானம் 91 பேருடன் மாயமானது. விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் ரேடாரில் இருந்து மறைந்தது என முதல்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது.

விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான ரேடார் சிக்னல் துண்டிக்கப்பட்டது என்ற தகவலை ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்து உள்ளது.

“சோச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற டியு-154 ரக ராணுவ விமானம் சிறிது நேரத்தில் ரேடார் திரையில் இருந்து விலகியது என முதல்கட்ட தரவுகள் தெரிவித்து உள்ளன. தோராயமாக விமானத்தில் 70 பேர் இருந்து இருக்கலாம்,” என நாட்டின் அவசரகால அமைச்சக தகவல்கள் தெரிவித்து உள்ளன என செய்திகள் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையே விமானத்தில் 82 பயணிகளும், 10 விமான பணியாளர்களும் பயணம் செய்தனர் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

Next Story