பெரு நாட்டில் வரலாறு காணாத மழை-வெள்ளம் 72 பேர் பலி


பெரு நாட்டில் வரலாறு காணாத மழை-வெள்ளம் 72 பேர் பலி
x
தினத்தந்தி 19 March 2017 9:47 AM GMT (Updated: 2017-03-19T15:17:32+05:30)

பெரு நாட்டில் வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கி 72 பேர் பலியாகி உள்ளனர்.

லிமா,

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பெரு நாட்டில் லிமா என்ற பகுதியில் கடந்த 2 நாட்களாக வரலாறு காணாத மழை பெய்து வருகிறது. இதனால் கடும் வெள்ளப்பெருக்கமும், மலைப்பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டது. முக்கியமான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.  தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை கயிறு மூலம் போலீசார் மீட்டு வருகின்றனர்.

கன மழை மேலும் இரண்டு வாரங்களுக்கு தொடரும் என அந்நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Next Story