செல்பி ஆசை உலகின் மிக மோசமான கொடூரமான மனிதன்,


செல்பி ஆசை உலகின் மிக மோசமான கொடூரமான மனிதன்,
x
தினத்தந்தி 23 March 2017 10:31 AM GMT (Updated: 2017-03-23T16:00:56+05:30)

பாதிக்கப்பட்டவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் செல்பி எடுத்ததால் உலகின் மிக மோசமான கொடூரமான மனிதன் என விமர்சனம்


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள பாராளுமன்றத்தில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலில் 4 பேர் கொல்லப்பட்டனர், 20-கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் உலகம் முழுவதும் அதிரச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தாக்குதல் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று வெளியாகி இணையத்தை அதிர வைத்துள்ளது.

அந்த புகைப்படத்தில் தாக்குதல் நடத்தப்பட்ட இடத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உயிருக்கு போராடி கொண்டிருக்கும் நிலையில் அங்கிருந்த நபர் ஒருவர் செல்பி ஸ்டிக்கில் போனை பொருத்தி செல்பி எடுத்துக்கொண்டிருக்கிறார்.

இணையத்தில் வெளியான இப்புகைப்படம் வைரலானது. இதைக் கண்ட பலர் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

அவன் உலகின் மிக மோசமான கொடூரமான மனிதன், எத்தனை பேர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். அவன் ஒரு அருவறுக்கதக்க முட்டாள் என கடுமையாக விமர்சித்துள்ளனர். 

Next Story