கென்யா நாட்டில் பஸ், லாரி நேருக்கு நேர் மோதல்; 26 பேர் பலி


கென்யா நாட்டில் பஸ், லாரி நேருக்கு நேர் மோதல்; 26 பேர் பலி
x
தினத்தந்தி 25 April 2017 9:15 PM GMT (Updated: 25 April 2017 8:52 PM GMT)

கென்யா நாட்டில் ஒரு பஸ்சும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து நேரிட்டது.

நைரோபி,

ஆப்பிரிக்க நாடான கென்யாவில், நைரோபி–மாம்போசா நகரங்களுக்கு இடையே உள்ள நெடுஞ்சாலையில் நேற்று ஒரு பஸ்சும், டேங்கர் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து நேரிட்டது. இந்த விபத்தில் 26 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர்.

விபத்து குறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த போலீசாரும், மீட்பு படையினரும் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிகளுக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இது குறித்து அந்தப் பகுதியை சேர்ந்த போலீஸ் அதிகாரி கூறும்போது, ‘‘பல வாகனங்களை முந்திச்சென்ற பஸ் கடைசியாக டேங்கர் லாரியுடன் மோதிக்கொண்டது. இதில் 26 பேரை இழந்து விட்டோம்’’ என்றார்.

கென்யாவில் சாலை பாதுகாப்பு மோசமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் அங்கு விபத்துக்களில் சுமார் 3 ஆயிரம் பேர் பலியாகின்றனர். கடந்த டிசம்பர் மாதம் நைரோபி நகரில் இருந்து 100 கி.மீ. வடமேற்கே ஒரு டேங்கர் லாரி, பல வாகனங்களுடன் மோதி வெடித்து சிதறிய கோர விபத்தில் 40 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story