ஆப்கானிஸ்தான் - இந்தியா கூட்டுறவை உடைக்க அமெரிக்காவின் உதவியை நாடும் பாகிஸ்தான்


ஆப்கானிஸ்தான் - இந்தியா கூட்டுறவை உடைக்க அமெரிக்காவின் உதவியை நாடும் பாகிஸ்தான்
x
தினத்தந்தி 8 May 2017 2:57 PM GMT (Updated: 2017-05-08T20:27:13+05:30)

ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா இடையிலான கூட்டுறைவை உடைக்க அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உதவியை நாடிஉள்ளது என செய்தி வெளியாகி உள்ளது.

இஸ்லாமாபாத்,

ஆப்கானிஸ்தானில் அமைதியின்மையை ஏற்படுத்தி வரும் தலிபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் புகழிடம் கொடுத்து உள்ளது. ஆப்கானிஸ்தானின் உள்கட்டமைப்பு, ராணுவ பயிற்சி, உளவுத்துறை தகவல் பகிர்வு, பயங்கரவாத தடுப்பு உள்ளிட்டவற்றில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கிறது. இதற்கு எப்போதும் போல பாகிஸ்தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பயங்கரவாதிகளை வளர்த்து இந்தியா, ஆப்கானிஸ்தானுக்கு பிரச்சனையை கொடுக்கும் பாகிஸ்தான் இப்போது அமெரிக்காவிடம் முறையிட்டு உள்ளது.

இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான உறவானது பிராந்திய அமைதியை சீர்குலைக்கும், அதனை உடையுங்கள் என அமெரிக்காவிடம் பாகிஸ்தான் உதவியை நாடிஉள்ளது என பாகிஸ்தான் பத்திரிக்கையான தி நேஷன் செய்தி வெளியிட்டு உள்ளது. 

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையில் இப்போது ஏற்பட்டு உள்ள பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்ய அமெரிக்காவிடம் பாகிஸ்தான் கோரிக்கை விடுத்து உள்ளது என பாகிஸ்தான் மூத்த அதிகாரி கூறிஉள்ளார். “ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் இடையே அமைதி நிலவ வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது, ஆனால் இதற்கான நடவடிக்கையை சீர்குலைக்க இந்தியா முயற்சி செய்கிறது. இந்தியாவை பார்த்துக் கொள்ள நாங்கள் கேட்டுக் கொண்டு உள்ளோம். ஆப்கானிஸ்தானை இந்தியா தன்பக்கம் முழுவதுமாக இழுக்கிறது” என பாகிஸ்தான் அதிகாரி கூறிஉள்ளார் என செய்தி வெளியாகி உள்ளது.


Next Story