பாகிஸ்தான் குல்பூஷன் ஜாதவ் போன்ற வழக்குகளை சிவில் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் - ஐ.நா.சபை


பாகிஸ்தான் குல்பூஷன் ஜாதவ் போன்ற வழக்குகளை சிவில் நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் - ஐ.நா.சபை
x
தினத்தந்தி 16 May 2017 4:06 AM GMT (Updated: 16 May 2017 4:06 AM GMT)

குல்பூஷன் ஜாதவ் போன்ற வழக்குகளை சிவில் நீதிமன்றங்களிடம் ஒப்படையுங்கள் என பாகிஸ்தானை ஐ.நா.சபை கண்டித்து உள்ளது.

இஸ்லாமாபாத்,

குல்பூஷன் ஜாதவிற்கு முன்கூட்டியே மரண தண்டனை பாகிஸ்தான் நிறைவேற்றலாம் என இந்தியா சர்வதேச நீதிமன்றம் சென்று உள்ளது. சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும்நிலையில், ஐ.நா. சபையின் சித்தரவதைக்கு எதிரான குழுவானது பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றத்தின் செயல்பாட்டை விமர்சனம் செய்து உள்ளது. பாகிஸ்தானின் ராணுவ நீதிமன்றத்தில் ராணுவ உயர் அதிகாரிகளின் ஆதிக்கம் நிலவுகிறது, வெளிப்படைதன்மை இல்லாமல் விசாரணையானது முன்னெடுக்கப்படுகிறது என விமர்சனம் செய்து உள்ளது.

பாகிஸ்தான் பயங்கரவாதம் தொடர்பான விவகாரத்தில் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்படுவோர்கள் மீதான விசாரணையை சிவில் கோர்ட்டுகளில் ஒப்படைக்க வேண்டும் என ஐ.நா.வின் அறிக்கையானது குறிப்பிட்டு உள்ளது. பயங்கரவாதம் தொடர்பான விவகாரங்களில் கைது செய்யப்படுபவர்கள் சிவில் நீதிமன்றங்களை நாட முடியாத வண்ணம் ராணுவ கோர்ட்டு அதிஉயர் அதிகாரம் பெற்று செயல்பட்டு வருகிறது, இதனை பாகிஸ்தான் முடித்துக் கொள்ளவேண்டும் என ஐ.நா. சபை கூறிஉள்ளது. 

குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் அதிகாரிகளால் ஈரானில் கைது செய்யப்பட்டு உள்ளார் என இந்தியா தரப்பில் குற்றம் சாட்டப்படுகிறது. 

Next Story