அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட இந்தியர் உயிரிழப்பு


அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட இந்தியர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 19 May 2017 6:32 AM GMT (Updated: 2017-05-19T12:02:01+05:30)

அமெரிக்க விமான நிலையத்தில் அதிகாரிகளால் தடுப்பு காவலில் வைக்கப்பட்ட 58 வயது இந்திய முதியவர் உயிரிழந்தார்.

நியூயார்க்,

அட்லாண்டா தடுப்பு மையத்தில் அமெரிக்க குடிவரவுத் துறை அதிகாரிகளால் இந்தியர் அதுல் குமார் பாபுபாய் படேல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். 10-ம் தேதி ஈகுவாட்டாரில் இருந்து படேல் அட்லாண்டா சென்ற போது அமெரிக்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததை அடுத்து அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உள்ளனர். அவரை தடுப்பு காவல் மையத்திற்கு அழைத்து சென்று உள்ளனர். அப்போது முதல்கட்டமாக அவருக்கு அதிகமாக ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு பாதிப்பு இருப்பது காணப்பட்டு உள்ளது. 

அவருடைய உடல் நிலை பரிசோதனை செய்யப்பட்ட போது அவர் மூச்சுவிட சிறமப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து அவர் அட்லாண்டா கிரேடி மெமோரியல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய் கிழமை மாலை உயிரிழந்துவிட்டார். இதயத்தில் இருந்த பிரச்சனை காரணமாக அவர் உயிரிழந்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்திய தூதரகத்திடம் இது தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. எங்களுடைய காவலில் உயிரிழப்பு என்பது மிகவும் அரிதானது ஒருசம்பவம் என அமெரிக்க குடிவரவுத்துறை அதிகாரிகள் கூறிஉள்ளனர். ஆனால் அமெரிக்க குடிவரவுத்துறை அதிகாரிகள் காவலில் ஒரு வாரத்தில் உயிரிழந்த இரண்டாவது நபர் இவர் ஆவார். இந்த 2017-ம் ஆண்டு மட்டும் 8 பேர் உயிரிழந்து உள்ளனர். 

அமெரிக்க அதிகாரிகள் தடுப்பு காவலில் இருப்பவர்கள் உயிரிழக்கும் சம்பவத்திற்கு குடியேற்ற உரிமை ஆர்வலர்கள் கடுமையாக விமர்சனம் செய்து உள்ளனர், இதனை அரசு மூட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். சட்டவிரோத குடியேற்றத்தில் கடும் நடவடிக்கை காரணமாக கைது நடவடிக்கையானது உயர்ந்து உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறிஉள்ளார்.

Next Story