இஸ்லாமாபாத்தில் போதிய பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியர் ஒருவர் கைது


இஸ்லாமாபாத்தில் போதிய பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியர் ஒருவர் கைது
x
தினத்தந்தி 21 May 2017 10:49 AM GMT (Updated: 2017-05-21T16:18:55+05:30)

இஸ்லாமாபாத்தில் போதிய பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளது.


இஸ்லாமாபாத்,

போதிய டிராவல் ஆவணங்கள் இல்லாமல் கைது செய்யப்பட்ட இந்தியரின் அடையாளம் தெரிவிக்கப்படவில்லை. இந்தியருக்கு எதிராக பாகிஸ்தான் வெளிநாட்டு சட்டத்தின் பிரிவு 14-ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது என உள்ளூர் மீடியா செய்தி வெளியிட்டு உள்ளது. கைது செய்யப்பட்ட இந்தியர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பட்டு உள்ளார் எனவும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. இதற்கிடையே கைது செய்யப்பட்டவர் சேக் நபி எனவும், மும்பையை சேர்ந்தவர் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.


Next Story