சவுதி அரேபியாவில் பெண்களுக்கு அதிகாரம் மெலேனியா டிரம்ப் கருத்துக்கு விமர்சனம்


சவுதி அரேபியாவில் பெண்களுக்கு அதிகாரம் மெலேனியா டிரம்ப் கருத்துக்கு விமர்சனம்
x
தினத்தந்தி 23 May 2017 4:58 AM GMT (Updated: 2017-05-23T10:48:56+05:30)

இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெலேனியா டிரம்ப், அந்நாட்டில் பெண்களுக்கு அதிகாரமளித்திருப்பது குறித்து புகழ்ந்துள்ளது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், தனது மனைவியுடன் முதல் சுற்றுப்பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றிருந்தார்.

சுற்றுப்பயணம் மேற்கொண்ட மெலேனியா டிரம்ப், அந்நாட்டில் பணியாற்றும் பெண்களை சந்தித்த புகைப்படத்துடன் சவுதியில் பெண்களுக்கு அதிகாரமளித்துள்ளது குறித்து புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

மெலேனியா டிரம்ப்பின் புகழச்சி பொய்யானது என விமர்சித்துள்ள பெண்கள் உள்பட பலர், சவுதியில் பெண்கள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டு, மூன்றாவது நாட்டினர் போல் ஓடுக்கப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என விமர்சித்துள்ளனர்.Next Story