மான்செஸ்டர் குண்டுவெடிப்பு அமெரிக்காவுடன் தகவல்கள் பகிர்வதை பிரிட்டன் போலீஸ் நிறுத்தியது!


மான்செஸ்டர் குண்டுவெடிப்பு அமெரிக்காவுடன் தகவல்கள் பகிர்வதை பிரிட்டன் போலீஸ் நிறுத்தியது!
x
தினத்தந்தி 25 May 2017 9:46 AM GMT (Updated: 25 May 2017 10:10 AM GMT)

வாக்குப்பதிவு இயந்திர விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் அழைப்பை ஏற்று சவாலில் பங்கேற்க எந்த கட்சியும் பதிவு செய்யவில்லை என தெரியவந்துள்ளது.


லண்டன்,


இங்கிலாந்து நாட்டில், மான்செஸ்டர் நகரில் உள்ள அரங்கம் ஒன்றில் கடந்த 22–ந் தேதி இரவு அமெரிக்க பாடகி அரியானா கிராண்டேயின் பாப் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சி முடிந்து, அவர் மேடையில் இருந்து இறங்கி வெளியேறிய நிலையில், அங்கு பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில், குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகினர். இந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பு ஏற்றது.

இந்த குண்டுவெடிப்பை நடத்தியவர், சல்மான் அபேதி (வயது 22) என தெரியவந்துள்ளது. விசாரணை நடத்தி வரும் பிரிட்டன் போலீஸ் சல்மான் அபேதி சகோதரன் இஸ்மாயில் உள்பட 7 பேரை கைது செய்து உள்ளது. மேலும் தாக்குதல் நடத்தலாம் என பிரிட்டன் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது. பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதால் தகவல்கள் அமெரிக்காவுடன் பகிரப்பட்டதாக தெரிகிறது. 

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் குண்டுவெடிப்பு காட்சிகள் அடங்கிய புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்து உள்ளது. 

விசாரணை அதிகாரிகளால் சேகரிக்கப்பட்ட புகைப்படங்கள் பத்திரிக்கையில் வெளியானது பெரும் விஷயம் ஆகி உள்ளது. அதிக சக்திவாய்ந்த வெடிகுண்டை பயங்கரவாதி மிகவும் எளிமையான முறையில் கொண்டு சென்று தாக்குதலை நடத்தி உள்ளான் என அடுத்தடுத்து தகவல்களை வெளியிட்டு உள்ளது. பிரிட்டன் அதிகாரிகளால் சேகரிக்கப்பட்ட தகவல்களின் படி பயங்கரவாதி எப்படி வெடிகுண்டை வெடிக்க செய்து உள்ளான் என பிரிட்டன் அதிகாரிகள் சேகரித்த புகைப்படங்களை கொண்டு செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளது. விசாரணை தகவல்கள் வெளியானதில் பிரிட்டன் அதிருப்தி அடைந்து உள்ளது.

 இவ்விவகாரம் தொடர்பாக டொனால்டு டிரம்பிடம், பிரிட்டன் பிரதமர் தெரசா மே கவலையை தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாகியது.

இந்நிலையில் மான்செஸ்டர் குண்டுவெடிப்பு விசாரணை குறித்து அமெரிக்காவுடன் தகவல்கள் பகிர்வதை பிரிட்டன் போலீஸ் நிறுத்தியது என பிபிசி செய்தி வெளியிட்டு உள்ளது. குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பான புகைப்பட ஆவணங்கள் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியானதில் இங்கிலாந்து விசாரணை அதிகாரிகளை கோபம் அடைய செய்து உள்ளது எனவும் செய்தி வெளியாகி உள்ளது.


Next Story