விரைவில் சூரியனை தொடும் திட்டம் நாசா நாளை முக்கிய அறிவிப்பு


விரைவில் சூரியனை தொடும் திட்டம்  நாசா நாளை முக்கிய அறிவிப்பு
x
தினத்தந்தி 30 May 2017 7:53 AM GMT (Updated: 30 May 2017 7:53 AM GMT)

சூரியனை தொடும் திட்டம் நாசா விரைவில் விண்கலம் அனுப்ப உள்ளது இதற்கான முக்கிய அறிவிப்பை நாளை நாசா வெளியிட உள்ளது.

புரிந்து கொள்ள முடியாத சூரியனின் மர்மங்கள் குறித்து அறிந்து கொள்ள நாசா விஞ்ஞானிகள் தொடர்ந்து கடுமையாக போராடி வருகின்றனர். சூரியன் குறித்து ஆராய்ச்சி செய்ய நாசா அனுப்பும் விண்கலம் சோலார் ப்ரோ பிளஸ் (SPP) 2018 நாம் ஆண்டு கோடை காலத்தில் அனுப்பப்பட உள்ளது.

விண்கலம் சூரியனின் மேற்பரப்பில் நான்கு மில்லியன் மைல்களுக்குள் சூரியன் சுற்றுப்பாதையில் நிறுத்தப்பட உள்ளது. இந்த விண்கலம் மற்ற விண்கலம் போல் அல்லாமல் வெப்பம் மற்றும் கதிர்வீச்சை தாங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது.

விண்கலம் சூரியனின் வெளிப்புற வளிமண்டலத்தை ஆராய்வது மட்டுமின்றி, பல தசாப்தங்களாக நட்சத்திரங்கள் எப்படி வேலை செய்கிறது என்பது பற்றிய இயற்பியல் கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் தனது ஆய்வை மேற்கொள்ள உள்ளது.

சூரியனின் மேற்பரப்பு வளிமண்டலம் கோரோனா சூரியனின் மேற்பரப்பை விட பல நூறுமடங்கு வெப்பமாக உள்ளது. வெப்ப நிலை 5 லட்சம் டிகிரி செல்சியஸ் மற்றும் அதற்கு அதிகமாக உள்ளது.

1,400 டிகிரி செல்சியஸ் வெப்பம் மற்றும் கதிர்வீச்சை 11.5 சிம் தடிமனான கார்பன் கலப்பு வெப்ப கவசம் மூலம் சமாளிக்க நாசா திட்டமிட்டுள்ளது.

இந்த சூரிய ஆய்வு திட்டத்திற்கு 180 மில்லியன் டாலர்  செலவிடப்பட்டு உள்ளது. விண்கலத்தில் 3டி கேமிரா, சூரிய காற்று துகள் கண்டிபிடிக்கும் கருவி,காந்த புலங்களை அளவிடக்கூடிய கருவிகள் பொருத்தப்பட உள்ளது.

இந்த திட்டம் குறித்த முக்கிய அறிவிப்புகளை நாளை 31 ந்தேதி நாசா அறிவிக்க உள்ளது. 

Next Story