சீனாவின் அதிவேக புல்லட் ரயில் பயணத்தைத் துவங்கியது


சீனாவின் அதிவேக புல்லட் ரயில் பயணத்தைத் துவங்கியது
x
தினத்தந்தி 26 Jun 2017 10:40 AM GMT (Updated: 26 Jun 2017 10:40 AM GMT)

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அடுத்தத் தலைமுறை புல்லட் ரயில் சீனாவில் தனது பயணத்தைத் துவங்கியது.

பெய்ஜிங்

சீனாவின் இரு பெரும் நகரங்களான பெய்ஜிங் - ஷாங்காய் ற்கு இடையே 400 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய புல்லட் ரயில் தனது பயணத்தைத் துவங்கியது. முதல் பயணத்தை இரு நகரங்களிலிருந்து இரண்டு ரயில்கள் துவங்கின. பெய்ஜிங்கிலிருந்து கிளம்பிய ரயில் 5 மணி நேரம் 45 நிமிடங்கள் பயணம் செய்து ஷாங்காயை அடைந்தது. நடுவில் 10 ரயில் நிலையங்களில் அது நின்றது. இரு நகரங்களுக்கும் இடையிலான தூரம் 1,300 கிலோமீட்டர்களுக்கும் மேலாகும்.

தினசரி சுமார் 50, 000 பேர் இப்பாதையை பயன்படுத்துகின்றனர். உலகின் நீளமான ரயில் பாதையை கொண்டுள்ளது. அதன் நீளம் சென்ற ஆண்டு வரையில் 22,000 கிலோமீட்டர்களாகும். உலகின் மொத்த நீளமான ரயில் பாதை அளவில் இது 60 சதவீதமாகும்.


Next Story