மியான்மார், தாய்லாந்து நாடுகளில் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப் பொருட்கள் அழிப்பு


மியான்மார், தாய்லாந்து நாடுகளில் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப் பொருட்கள் அழிப்பு
x
தினத்தந்தி 26 Jun 2017 11:07 AM GMT (Updated: 26 Jun 2017 11:07 AM GMT)

போதை மருந்துகளுக்கு எதிரான ஐ நா தினமான இன்று மியான்மார், தாய்லாந்து நாட்டு அதிகாரிகள் 800 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்களை அழித்தனர்.

பாங்காக்

தாய்லாந்தின் அயுத்தாயா மாகாணத்தில் 9 டன்கள் எடையுள்ள போதைப்பொருட்கள் எரிக்கப்பட்டன. இதன் சந்தை மதிப்பு 590 மில்லியன் டாலர்களாகும்.

போதை மருந்து கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகார்கள் கூறும்போது, “எங்களால் இப்போது போதைப் பொருள் வலைப்பின்னலை தகர்க்க முடிகிறது. சர்வதேச கடத்தல்காரர்கள் தாய்லாந்திற்குள் போதைப்பொருட்களை கடத்தி வந்து அவற்றை மலேசியா மற்றும் இதர நாடுகளுக்கு கொண்டு செல்கின்றனர்” என்றனர்.

அருகாமை நாடான மியான்மார் உலகளவில் அதிகமான போதைப்பொருட்களை உற்பத்தி செய்யும் நாடாகும். அவற்றை சீனாவிற்குள் கடத்தவும் செய்கின்றனர். சென்றாண்டு மியான்மாரின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் போதைப்பொருட்களை கட்டுப்படுத்த முடியாத நிலையை கொண்டிருப்பதற்கு ஏமாற்றம் தெரிவித்தனர். போதைப் பொருட்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதற்கு தயங்குவதாகவும் அவர்கள் கூறினர். மியான்மார் அதிகாரிகள் 217 மில்லியன் டாலர் மதிப்புள்ள போதைப்பொருட்களை கைப்பற்றி அழித்துள்ளனர்.

தென் கிழக்கு ஆசியாவில் ஹெராயின் மற்றும் மெத்தம்பெடாமைன் போதை வஸ்துகளின் வர்த்தகம் 2013 ஆம் ஆண்டில் 31 பில்லியன் டாலர்கள் என்று ஐ நா சபை கணக்கிட்டிருந்தது.


Next Story