மோடி - டொனால்டு டிரம்ப் சந்திப்பின் போது ஹெச்-1பி விசா குறித்து ஆலோசிக்கப்படவில்லை


மோடி - டொனால்டு டிரம்ப் சந்திப்பின் போது ஹெச்-1பி விசா குறித்து ஆலோசிக்கப்படவில்லை
x
தினத்தந்தி 27 Jun 2017 7:28 AM GMT (Updated: 27 Jun 2017 7:28 AM GMT)

அமெரிக்காவில் பிரதமர் மோடி - அதிபர் டொனால்டு டிரம்ப் இடையிலான சந்திப்பின் போது ஹெச்-1பி விசா குறித்து ஆலோசிக்கவில்லை.


வாஷிங்டன்,

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்வதற்கு பிற நாட்டினருக்கு ‘எச்-1 பி’ விசா வழங்கப்படுகிறது. 
இந்த ‘எச்-1 பி’ விசாக்களை இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள், பணியாளர்கள் அதிகளவில் பெற்று வருகின்றனர்.

இந்த ‘எச்-1 பி’ விசாக்களை வழங்குவதில் சீர்திருத்தம் என்ற பெயரில் புதிய கட்டுப்பாடுகளை அமெரிக்க அரசு கொண்டு வந்துள்ளது. 

  அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகள், பிற நாட்டினருக்கு போய்ச்சேராமல் இருப்பதற்கு ‘ஹெச்-1 பி’ விசாக்களை வழங்குவதில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வருவதற்கான நிர்வாக உத்தரவில் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இந்தியா உள்பட அமெரிக்காவில் அலுவலகங்கள் வைத்துள்ள பல நாடுகளும் சிக்கலை சந்தித்துள்ளன. அமெரிக்காவில் ஹெச்-1பி விசா அதிகமாக பெற்று உள்ளவர்கள் இந்தியர்கள் ஆவர். டொனால்டு டிரம்பின் இந்த நகர்வை அடுத்து பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொண்டார். அவர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசும் போது ஹெச்-1பி விசா குறித்து பேசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. 

 ‘ஹெச்-1 பி’ விசா விவகாரமானது இருநாடுகள் இடையே ஆன நட்புறவில் சிக்கலான தோற்றத்தை ஏற்படுத்தியது. இந்த பின்னணியில் மோடி ட்ரம்ப் இடையிலான சந்திப்பு கூர்ந்து கவனிக்கப்பட்டது. ஆனால் பிரதமர் மோடி - அதிபர் டொனால்டு டிரம்ப் இடையிலான சந்திப்பின் போது ஹெச்-1பி விசா குறித்து ஆலோசிக்கவில்லை. இருநாட்டு தலைவர்கள் இடையிலான பேச்சின் போது இவ்விவகாரம் இடம்பெறவில்லை. 

இருநாட்டு தலைவர்கள் சந்திப்பின் போது ஹெச்-1பி விசா குறித்து பேசப்பட்டதா என கேள்வி எழுப்பிய போது இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 

தொழில்துறை தலைவர்களுடன் பல்வேறு விவகாரம் தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டது, இருநாட்டு தலைவர்களும் டிஜிட்டல் பாட்னர்ஷிப் குறித்து ஆலோசித்தனர் என்றார். இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தையின் போது குறிப்பாக ஹெச்-1பி விசா விவகாரம் குறிப்பிடும் படியாக இடம்பெறவில்லை. டொனால்டு டிரம்ப் - மோடி வெள்ளை மாளிகையில் சந்தித்து பேசிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசினர். அப்போதும் ஹெச்-1பி விசா விவகாரம் தொடர்பாக எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

Next Story