நைஜீரியாவிற்கு விமானங்கள் விற்கிறது அமெரிக்கா


நைஜீரியாவிற்கு விமானங்கள் விற்கிறது அமெரிக்கா
x
தினத்தந்தி 29 Aug 2017 12:04 AM GMT (Updated: 2017-08-29T05:44:11+05:30)

நைஜீரியா நாட்டிற்கு 593 மில்லியன் டாலர் மதிப்பில் விமானங்களை விற்கவுள்ளது.

வாஷிங்டன்

நைஜீரியாவிற்கு விமானங்களை விற்கும் விஷயத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன் அதன் நாடாளுமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியா போகோ ஹராம் எனும் தீவிரவாதக்குழுவின் தாக்குதல்களால் அவதிப்பட்டு வருகிறது. இந்நாட்டிற்கு உதவும் எண்ணத்தில் 12 சூப்பர் டுகானோ ஏ-29 எனும் விமானங்களையும், அதனையும் உள்ளிட்ட 593 மில்லியன் டாலர் ராணுவ உதவியையும் வழங்க அமெரிக்கா முடிவு செய்தது.

விமானங்கள் பிரேசில் நாட்டின் எம்ப்ரேயர் நிறுவனத்தால் தயாரிக்கப்படுபவையாகும். இவை உளவு பார்த்தலுடன், தாக்குதல் நடத்தவும் ஏதுவானவையாகும். 


Next Story