உலக செய்திகள்

அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது ஈரான் திட்டவட்டம் + "||" + Iran sanctions: Tehran vows retaliation over Trump move

அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது ஈரான் திட்டவட்டம்

அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது ஈரான் திட்டவட்டம்
வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்க முடியாது என ஈரான் உறுதி பட தெரிவித்துள்ளது. #Iran | #donaldtrump | #tamilnews
டெக்ரான், 

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு உள்ளதாக வல்லரசு நாடுகள் குற்றம் சாட்டி வந்தன. அந்த நாட்டின்மீது பொருளாதார தடைகளையும் விதித்தன.இந்த நிலையில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனியுடனும் ஈரான் 2015–ம் ஆண்டு அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஒப்பந்தம், ஈரானில் உள்ள அணுசக்தி நிலையங்களில் 20 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட யுரேனியத்தை செறிவூட்டுவதை தடை செய்கிறது. அதேபோன்று ஈரான் மீதான பொருளாதார தடைகளை படிப்படியாக விலக்கிக்கொள்ளவும் அந்த ஒப்பந்தம் வழி வகுக்கிறது.ஒபாமா ஆட்சிக்காலத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தத்தை கைவிடப்போவதாக அவ்வப்போது தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டி வருகிறார்.

தற்போது அவர், இந்த ஒப்பந்தம் தொடர்ந்து அமலில் இருக்க வேண்டுமானால், ஈரான் மீது கடுமையான நிபந்தனைகள் விதிக்க வேண்டும், அதில் உள்ள பிழைகளை திருத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்.இதை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது.

இது பற்றி அதன் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளது. அந்த அறிக்கையில், ‘‘தற்போது அல்லது இனி வரும் காலத்தில் அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்த ஒரு திருத்தம் செய்தாலும் அதை ஈரான் ஏற்றுக்கொள்ளாது. இந்த ஒப்பந்தத்துடன் பிற பிரச்சினைகளை தொடர்பு படுத்துவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது’’ என கூறப்பட்டு உள்ளது.  #Iran | #donaldtrump | #tamilnews